அச்சிடுக

2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபைக்கு அமைவாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை பதிவுகளின் ஒழுங்குவிதி மற்றும் கட்டுப்பாடு, அனுமதிப்பத்திரமளித்தல், தயாரிப்பு, இறக்குமதி மற்றும் மருத்துவ கருவிகள் சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்து அம்சங்கள் தேசிய மருந்துகள் கொள்கையுடன் இணங்கியொழுகுகின்றன என்பதற்கு பொறுப்பாக இருக்கின்றது;

மருத்துவ கருவியொன்றின் வரைவிலக்கணம்:

சட்டத்தில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள வகையில் "ஒரு மருத்துவ கருவி" என்பதன் கருத்து பின்வரும் நோக்கங்கங்களுக்காக மனித வர்க்கத்தின் மீது அல்லது மனித வர்க்கத்துக்குள் பயன்படுத்துவதற்கு தயாரிப்பாளர் கருதுகின்ற ஏதேனும் கருவிகள், உபகரணங்கள், பொருட்கள், மென்பொருள், பொருள் மற்றும் ஏனைய விடயம் என்பவற்றை தனியாக அல்லது இணைத்து பயன்படுத்துகின்ற, சரியான பயன்பட்டுக்குத் தேவைப்படுகின்ற மென்பொருள் உள்ளிட்ட பொருட்கள்:

அத்துடன் அது மனித உடம்புக்குள் அல்லது உடம்பின் மேல் எதிர்பார்க்கப்பட்ட மருந்தாக்க, நோயெதிர்ப்பு அல்லது வேதியியல் செயற்பாட்டை நிறைவேற்றாவிட்டால், அத்தகைய செயற்பாட்டுக்கு உதவலாம்.

ஒரு மருத்துவ கருவியில் சுதேச மருத்துவ (ஆயுர்வேத) அல்லது ஹோமியோபதி கருவி உள்ளடங்காது.

மருத்துவ கருவிகளை அங்கீகரிப்பதில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் (NMRA) விடயப்பரப்பும் பொறுப்புகளும்

இலங்கையில் விநியோகிப்பதற்கு இருக்கின்ற மருத்துவ கருவிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரம், பாதுகாப்பு, அதன் எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA) கொண்டுள்ளது. அதன்படி மேலே வரைவிலக்கணத்தில் உள்ளபடி அனைத்து மருத்துவ கருவிகளும் வகைப்படுத்தப்படுகின்றன. அத்துடன் அவை அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட வேண்டியதோடு இலங்கையில் அவற்றைத் தயாரிப்பதற்கு, இறக்குமதிசெய்வதற்கு, மீள் பொதியிடுவதற்கு, விற்பனைசெய்வதற்கு மற்றும் விற்பனைக்காக வழங்குவதற்கு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்து வெளிநாட்டு மருத்துவ கருவிகள் தயாரிப்பாளர்கள் தம்மைப் பதிவுசெய்துகொள்ளுவதற்கு சந்தைப்படுத்தும் அதிகாரம் கொண்டுள்ளவர் (உள்ளூர் முகவர்) ஊடாக பதிவுசெய்துகொள்ளுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த முகவர் பதிவு, அனுமதிப்பத்திரம் வழங்கல், இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகம், தர தோல்வியை கையாள்தல் மற்றும் இலங்கையில் குறித்த மருத்துவ கருவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மருத்துவ கருவி மதிப்பீட்டு குழு

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் (NMRA) கீழ் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கருவி மதிப்பீட்டு குழு (MDEC) பதிவுக்காக மருத்துவ கருவிகளை முன்வைக்கும்போது அத்தகைய கருவிகளின் தரம், பாதுகாப்பு, வினைத்திறன், தேவை மற்றும் விலை என்பவற்றைக் கவனத்திற்கொண்டு தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொள்ளுகிறது. இந்த மருத்துவ கருவி மதிப்பீட்டு குழு (MDEC) மருத்துவ மற்றும் மருந்தாக்க துறையில் உள்ள பல்வேறு நிபுணர்களைக் கொண்டுள்ளது. இந்த குழு மருந்துகளின் சந்தைப்படுத்தும் அதிகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்களைப் பற்றி தீர்மானிப்பதற்காகவும் மருந்துகளின் சந்தைப்படுத்தும் அதிகாரத்திற்கு தகுந்த கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளுவதற்கு மாதம் ஒருமுறை கூடுகின்றது.